தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு காஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமாவில் பிரபலமானார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பட்டியலில் பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது.
ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு ஒரு சிறந்த திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை நடிகைக்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஷாலு ஷம்மு சமீப காலங்களாக சினிமாவில் பட வாய்ப்பு சரியாக அமையவில்லை.
இதனால் நடிகை ஷாலு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஷாலு ஷம்மு வீடியோவை வெளியிடும் போது தனது நண்பர்களுடன் ஆடிய நடனங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனால் இந்த வீடியோ பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஷாலு அம்மு தற்போது இரவு நேர பார்ட்டியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவினை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.