இறுதிக்கட்டத்தில் காசேதான் கடவுளடா ரீமேக்!-ஷூட்டிங் அப்டேட் இதோ!

3 years ago 309

1970களில் வெளியாகி மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா நகைச்சுவை திரைப்படம் தற்போது ரீமேக் ஆகிறது . 

நடிகர் சிவா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் காசேதான் கடவுளடா ரீமேக்கில் நடிகைகள் ஊர்வசி , ப்ரியா ஆனந்த் ,கருணாகரன், தலைவாசல் விஜய் ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக்கு வித்து கோமாளி புகழ் & சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகும் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய N.கண்ணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் காசேதான் கடவுளடா படபிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

சரியாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நகர்வதால் கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் R.கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த சில தினங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறவுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவைத் திரைப்படமான காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக்காக வெளிவரும் இந்த காசேதான் கடவுளடா கட்டாயம் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...