இவர்தான் உங்க வருங்கால மனைவியா! புகழ் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்!

3 years ago 598

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இதில் கோமாளியாக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் புகழ். தனது காமெடியான பேச்சால், செயலால் அவர்  ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 


அவர் அதிகமாக பெண் வேடமிட்டு நடித்து அனைவரையும் ரசிக்க வைப்பார். புகழுக்கு தற்போது வெள்ளித்திரையிலும் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அவர் ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஹாப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் இவர்தான் புகழின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...