உங்களை திருமண் செய்ய என்ன செய்ய வேண்டும்? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரியா பவானி

3 years ago 586

நியூஸ் ரீடராக இருந்து ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் கடந்த 2017-ம் ஆண்டில் மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரியா பவனி சங்கருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணபெண்ணே, பொம்மை, ஹாஸ்டல், ருத்திரன், இந்தியன் 2, பத்து தல படங்களில் இடம் பெற்றுள்ளார். 

பிரியா பவானி சங்கர் நீண்ட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். திரைத்துறைக்கு வந்த பின் பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசு உருவானதால், தனது கல்லூரி நாட்கள் முதல் தற்போது வரை ராஜவேலை மட்டுமே காதலித்து வருவதாக வெளிப்படுத்தினார்.

சோஷியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர். தன்னை கடுமையாக அல்லது தகாத முறைகள் விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுப்பதில் வல்லவர். 

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஃபாலோயர்களுடன் ஒரு கேள்வி பதில் அமர்வை (question and answer session) நடத்தினார். 

தனது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரியா, அவரை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் கொடுத்துள்ளார் பிரியா.

உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன..?” என்று ஹார்டின் ஈமோஜிகளுடன் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, தான் ஏற்கனவே காதலில் இருப்பதாக நினைவூட்டிய நடிகை, என்னை திருமணம் செய்து கொள்வதற்கான செயல்முறை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. 

ஏனென்றால் இப்போது புதிதாக ஒருவருக்கு ஓகே சொல்வது மிகவும் சிக்கலானது என்று வேடிக்கையாக கூறினார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...