“உங்களை மிஸ் செய்கிறேன்”...சோகத்தை வார்த்தைகளில் கொட்டிய வனிதா...!

3 years ago 555

திரையுலக பிரபலங்களான விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா . குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர், ஹீரோயினாகவும் சந்திரலேகா, மாணிக்கம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த வனிதா வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்துவிட்டார். 

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர். சமீபத்தில் ‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாதிலேயே விலகினார். 

தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் வனிதா தற்போது தன்னுடைய அம்மா பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அப்பா விஜயகுமார் மற்றும் சகோதர, சகோதரிகள் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனிதா அவருடைய குடும்பத்தை விட்டு விலகி, இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். அதன் பின்னர் பீட்டர் பால் உடன் நடந்த 3வது திருமணம் அந்த விரிசலை மேலும் பெரிதாக்கியது. 

 இந்நிலையில் தான் அம்மா மஞ்சுளாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் கயல் ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரீ ட்வீட் செய்துள்ள வனிதா, “உங்களால் முடிந்ததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள், கொடுக்கத் தெரிந்திருக்கிறீர்கள்.. நீங்கள் எல்லாவற்றின் மூலமும் என்னுடன் இருக்க முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள்.. மிஸ் பண்றேன் நான் ஒவ்வொரு நொடியும் உங்களை மிஸ் செய்கிறேன்.. நீங்கள் என் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் என்னுடன் இருந்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன்.. ஆனால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன்.. என உருக்கமாக 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...