உச்சகட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி... முதல் முயற்சிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி...!

3 years ago 296

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம்  “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

இந்த நிறுவனம் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.


"கூழாங்கல்" எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது என கூட்டாக அறிக்கைவிட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தனர்.

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம் டைகர் பிரிவில் தேர்வானது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. 

அந்த விழாவில் படக்குழுவினருடன் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன் பாரம்பரிய உடையில் பங்கேற்றது கவனம் ஈர்த்தது. 


தற்போது அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் டைகர் விருது வென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது. 

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் வெளியீட்டிற்கு இப்படியொரு பெருமை கிடைத்ததால் ஓட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...