உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி உற்சாகம்!

3 years ago 333

பிரபல நடிகையான சமீரா ரெட்டி தனது அதிகப்படியான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா, சமீபத்தில் ஷேர் செய்த போஸ்ட்டில் தான் 9 கிலோ வரை எடையை குறைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். 

தவிர மேலும் 8 கிலோ வரை உடல் எடையை குறைக்க தனது உடற்பயிற்சி பயணத்தை தொடர்வதாக அந்த போஸ்ட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


2002-ம் ஆண்டு முதல் திரையுலகில் நடிகையாக இருந்து வரும் மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். துவக்கத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இரு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி, பல மாதங்களாக எடை குறைப்பு பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, தனது எடை அதிகரிப்பு, மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு, கர்ப்பம் மற்றும் எடையிழப்பு பயணம், சுய காதல் பற்றி தனது ரசிகர்கள், ஃபாலோயர்கள் உள்ளிட்டோரிடம் போஸ்ட்கள் மூலம் ஷேர் செய்து வருகிறார். 

இந்நிலையில் ஒரே ஃபிரேமில் தனது இரு ஃபோட்டோக்களை ஷேர் செய்துள்ள சமீரா "9 கிலோ குறைத்து விட்டேன், இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது! 92 கிலோ உடல் எடையில் எனது எடை இழப்பு பயணத்தை துவக்கினேன். 

தற்போது அதிலிருந்து 9 கிலோ எடை குறைந்து 83 கிலோவில் உள்ளேன். இந்த பயணத்தை நாம் முழுமையாக முடிக்க இன்னும் 8 கிலோவை குறைக்க வேண்டும். எனது இலக்கை அடைவதற்கான ஒரே வழி நிலையான கவனம்"என்று குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...