உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது ஜெய் பீம்

3 years ago 271

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம்தான் ஜெய் பீம். 1985 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம் பலரையும் பேச வைத்துள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் இப்படம் நல்ல ஒரு பெயரை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஐஎம்டிபி இணையதளம் உலக அளவில் சிறந்த 250 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் 9.6 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. 

உலக அளவிலான சிறந்த திரைப்படங்களின் லிஸ்ட்டில் ஜெய் பீம் திரைப்படம் முதல் இடம் பிடித்திருப்பது சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகு வறுமையில் வாடி வரும் மறைந்த ராசா கண்ணுவின் மனைவி பார்வதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...