"எனக்கு அது மட்டுமே முக்கியம்" திருமணமல்ல? மீனா அதிரடி!

1 year ago 819

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 

இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார்.

ஆனால் காலதாமதம் காரணமாக நுரையீரல் கடக்காமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மீனா தன்னுடைய கணவர் இறந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். 

அண்மையில் கூட தன்னுடைய உடலை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'தனக்கு 2வது திருமணம் என்று வெளியாகி வரும் தகவல்களுக்கு நடிகை மீனா விளக்கமளித்துள்ளார். 

"எனது கணவர் இல்லை என்பதையே என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள்ளாகவே இதுபோன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம்" என்று மீனா கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...