எனக்கு சிறு வயதில் இருந்தே அந்த பிரச்சனை இருக்கிறது... காஜல் வெளிப்படை

3 years ago 309

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. 

சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதாக காஜல் அவர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 


“ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சனை சரியாகவில்லை. 

குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். 

உடனே வித்தியாசம் தெரிந்தது. நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும்'' என்றார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...