எனக்கும் கணவர்களுக்கும் ராசி இல்லை... நடிகையின் வைரலான பதிவு..!

2 years ago 605

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. 

இப்படத்தில் நடிகை காயத்ரிக்கு பெண் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தவரை மிகச்சிறப்பான கதாபாத்திரமாக அமைந்தது. இந்த படத்தில் ஃபஹத் பாசில் என்ற அமரின் அப்பாவி காதலியாக காயத்ரி நடித்தார்.


இதற்கிடையில், ட்விட்டர் பயனர் ஒருவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில், காயத்ரி தனது வருங்கால கணவராக வரும் விஜய் சேதுபதி தலையில் அடிபட்டு தன்னை மறந்துவிட்டார் என்பதை கூட கடைசிவரை அவர் அறியவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் தனது கணவர் திருநங்கை என்பது தனக்குத் தெரியாது என்றும், தற்போது ‘விக்ரம்’ படத்தில் தனது கணவர் ஃபஹத் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இறந்து போனதாகவும் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இந்த மூன்று படங்களில் அவரது கதாபாத்திரங்களில் உள்ள ஒற்றுமைகளுக்கு பதிலளித்த காயத்ரி, ‘கணவர்களுடன் தனக்கு ராசி இல்லை” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். மேலும், நேற்று இந்த ட்வீட் வைரலானதை அடுத்து இந்த ட்வீட்டை அவர் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...