எனது அதை பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்

3 years ago 211

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. 

மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.

தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும் வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும்’ என்றார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...