என் முன்னேற்றத்திற்கு காரணமே அதுதான்?.. உண்மையை உடைத்த சமந்தா

1 year ago 392

சமந்தா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரக்கூடிய சமந்தா அண்மையில் தசையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் தேறியுள்ளார்.

இப்போது அவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் கூறியபோது,

 "இயக்குனர் என்னிடம் சாகுந்தலம் திரைப்படத்தின் கதையை கூறியபோது தன்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.

ஏனெனில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதன்பின் வற்புறுத்தி நடிக்க வைத்தனர். அதே நேரம் கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது.


 அதனை தொடர்ந்து ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்துகொள்வேன். 

தற்போது பயத்தை தாண்டி போக முயற்சி செய்கிறேன். ஒரு நடிகையாக 3 வருடங்களாக என் முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம் தான்" என்று அவர் கூறினார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...