என்னது! ராதிகாவை கல்யாணம் செய்ய போகிறாரா கோபி? உச்சத்தில் பாக்கியலட்சுமி

3 years ago 423

விஜய் டிவி-யில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் பல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் அடங்கிய பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது.

இதே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின்பு டி.ஆர்.யில் மூன்றாவது இடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் எபிசோட்கள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

கோபி தனது முன்னாள் காதலி ராதிகாவிடம் தான் பழகி வரும் விஷயம் குடும்பத்தினருக்கு எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது என்று இதுநாள் வரை  செய்து வந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியது.

புது கார் வாங்கிய ராதிகாவை அழைத்து கொண்டு தனது வீட்டின் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்ற கோபி, தனது தந்தை ராமமூர்த்தியிடம் வசமாக சிக்கி கொள்கிறார். இதனால் கோபி - ராதிகா விஷயம் முதல் ஆளாக கோபியின் தந்தைக்கு தெரிய வருகிறது.

அடுத்த ட்விஸ்டாக, கோபியும் பாக்கியாவும் சென்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு எதிர்பாராமல் ராதிகா வந்தார். அப்போது கோபி தனது மனைவியுடன் சந்தோஷமாக சிரித்து பேசுவதை ராதிகா பார்த்து விட்டார், ஆனால் கோபியின் மனைவி பாக்கியா என்பது மட்டும் ராதிகாவுக்கு தெரியாது. கோபியை அப்படி பார்த்தது ராதிகாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆகியது. உடனே கோபிக்கு ஃபோன் செய்து கோபத்தில் கத்தி அழுகிறார்.

இந்நிலையில் தான் வரும் நாட்களுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ராதிகா வீட்டுக்கு போகும் கோபி,  எதோ எதோ பேசி கடைசியில் ராதிகாவை சமாதானம் செய்து விடுகிறார். 

அதுமட்டுமில்லை தனது நண்பனிடம் ராதிகாவை ஒருபோதும் பிரிந்து இருக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் பாக்கியாவை வெளியே அனுப்பி விட்டு ராதிகாவை கல்யாணம் செய்து கொள்வேன் என்றும் கூறி அனைவருக்கும் ஷாக் தருகிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...