என்னோட சக்காளத்தி இவங்கதான்! உண்மையை போட்டுடைத்த குஷ்பூ !

3 years ago 532

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் நல்ல நடிகராக உருவாகி வருகிறார். இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கதாநாயகனாக மாறியது மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம்தான்.

இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இசையிலும் தமிழ் தெலுங்கு என பல படங்களுக்கு இசையமைத்து கொண்டு தான் இருக்கிறார். 

இவருடைய மூன்று திரைப்படங்களையும் இயக்குனர் சுந்தர் சி தான் தயாரித்தார்.அவருடைய தயாரிப்பில் மூன்றாவது ஹிட் படமாக நான் சிரித்தால் அமைந்துள்ளது.

இந்த நிலையில் நான் சிரித்தாள் திரைப்படத்தின் வெற்றிகொண்டாட்டத்தில் நடிகை குஷ்பு, எனக்கு சக்களத்தி ஆதி தான் என மேடையில் பேசியுள்ளார்.

திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன்னரே ஆதி எங்களுக்கு நல்ல பழக்கம். தற்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராக உள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் குடும்பத்தில் எல்லாருமே ஆதியின் ரசிகர்கள்தான்.

ஆனால் ஆதி தான் எனக்கு சக்காளத்தி. என்னுடன் பேசுவதை விட சுந்தர் அவன்கிட்டதான் அ திகமா பேசுவாரு.

தூங்கி எந்திரிச்சு பார்த்தா கூட அவன்கிட்டத்தான் பேசிட்டு இருப்பாரு என கூறியுள்ளார். இவரது இந்த வேடிக்கையான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...