எப்படி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்? நெருங்கிய தோழி சொன்ன அப்டேட்!

3 years ago 462

தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். 

சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சையது, அமீர் ஆகிய இரண்டு நண்பர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்தில் யாஷிகா படுகாயமடைந்தார். அவரது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவுக்கு நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா, மருத்துவமனைக்கு சென்று யாஷிகாவை நேரில் பார்த்துள்ளார். அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, ”என்னுடைய தோழி நலமாக இருக்கிறார். விரைவில் நலம்பெற்று விடுவார். அவருடைய மன உறுதி திடமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...