எப்படி எடுத்துருக்கான்யா மனுஷன்... மனைவி ஐஸ்வர்யாவை புகைப்படம் எடுத்த தனுஷ்!

3 years ago 646

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் திகதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் அதனை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்க உள்ள அடுத்தடுத்த இரண்டு படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷே எடுத்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியபோது ’குடும்பத்திற்குள் அன்பு என்று வந்துவிட்டால் அந்த அன்பு நிபந்தனை அற்றதாக இருக்கும். 

அதை ஒருபோதும் யாரும் விடமாட்டார்கள். என்னுடன் இருக்கும் இந்த இரண்டு அன்பு உள்ளங்களை புகைப்படத்தை எடுத்தவர் எனது மெயின் அன்புக்குரியவர் என்று பதிவு செய்துள்ளார். 

காதலர் தினத்தில் தனுஷ் எடுத்த இந்த ஸ்பெஷல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...