பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
அந்த விழாவில், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ரொம்ப ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.
இந்த விழாவில் கவின் சிங்கிளாக வந்து மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில், நடிகை லாஸ்லியா படுகவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் லாஸ்லியாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், லாஸ்லியாவா இது... இப்படி எலும்பும், தோலுமாக மாறிவிட்டாரே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.