ஏன்டா துப்பாக்கி படத்துல நடிச்சோம்னு இருக்கு – புலம்பிய அஜித் பட நடிகை.

3 years ago 369

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் முதன் முறையாக இணைந்த துப்பாக்கி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் நடிகர் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது.

விஜய், காஜல், அகர்வால், வித்யுத் ஜமால், ஜெயராம், சத்யன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூர் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் இவர் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், துப்பாக்கி படத்தில் நடித்ததை நினைத்து ஏன்டா அந்த படத்தில் நடித்தோம் என்று தான் தோன்றுகிறது. 

என்னதான் விஜய் படத்தில் நடித்தாலும் நான் நடித்தது என்னவோ மோசமான ரோல் தான்.

அந்த மாதிரி ரோலை யாருக்கு தான் பிடிக்கும். அதுபோக இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்ட போது முருகதாஸ் சார் என்னிடம் சொன்னதே வேறு, நான் காஜல் அகர்வாலின் தோழி என்று தான் சொன்னார். 

ஆனால், படத்தில் வேறு மாதிரி காண்பித்து விட்டார்கள். இதனால் எனக்கு அவர்கள் மீது பெரிதாக கோபம் எல்லாம் கிடையாது, மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளார் அக்ஷரா.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...