ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி கேள்விப்பட்டதை மறுந்துடுங்க: வதந்தியாம்

3 years ago 399

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் தெலுங்கு படமான புஷ்பாவுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. 

இதை பார்த்த ரசிகர்களோ, கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு ஹீரோவுக்கு தங்கையாக நடித்தால் மற்றவர்கள் எப்படி அவரை ஹீரோயினாக பார்ப்பார்கள் என்றார்கள்.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தது. ஐஸ்வர்யாவுக்கும் பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 

இதையடுத்து தான் அவர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்க ரெடியாகிவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்று அவரின் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தி கிரேட் இந்தியன் கிட்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடந்து வருகிறார்.

அண்மையில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரனின் திருமண காட்சியை படமாக்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. அது ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...