ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?... ‘அரண்மனை 3’ மிரண்டு போன ரசிகர்கள்...!

3 years ago 409

தமிழ் சினிமாவில் ரசிக்கும் படியான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது காமெடி பாணியோடு, பேய் திரில்லிங்கையும் கலந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அரண்மனை 2 படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்து அசத்தியிருந்தார். 


நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படம் தயாராகி வருகிறது. சுந்தர்.சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா,  யோகி பாபு உள்ளிட்டோருடன் மறைந்த காமெடி நடிகர் விவேக்கும் நடித்திருந்தார். 

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் First லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திலிருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. படத்தின் ஷூட்டிங் காட்சிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தேவையான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரண்மனை 3 படத்தில் இடம் பெறும் இறுதி சண்டை காட்சிக்கு மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செட் அமைத்து படமாக்கியுள்ளார்களாம். அதுமட்டுமின்றி இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் 6 மாதத்திற்கு முன்பிருந்தே படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...