ஒரு நாளைக்கு 2 லட்சம்! இல்லாட்டி கிளம்பு! 39 வயதான நடிகையின் கண்டிஷன்..

3 years ago 624

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக களம் கண்டவர் தான் அந்த நடிகை. முக்கிய கதாபாத்திரத்தில் இவர் தான் இருக்க வேண்டும் என்று கூறுமளவிற்கு தயாரிப்பாளர்கள் போட்டிபோடுவார்கள் அந்த நடிகைக்காக.

தற்போது 39 வயதான நிலையிலும் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அம்மணி. மார்க்கெட் இல்லாத நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த அந்த நடிகை மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து கொண்டிருக்கிறார்.

இதனால் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். சினிமா வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன. அப்படி விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசி வருகிறாராம்.

சினிமாவில் ஒரு நாளுக்கு 10 லட்சம் வரை சம்பளம் பேசுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெரிந்த முகமாச்சே என வாய்ப்பு கொடுத்தால் அநியாயத்திற்கு சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பாளர்கள் பின்வாங்க ஆரம்பித்து விட்டார்களாம்.

அதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டால் இஷ்டம்னா கொடு, இல்லையென்றால் வந்தவழியே கிளம்புன்னு சொல்லிவிடுகிறாராம் அம்மணி.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...