தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன். இவர் முதலில் சின்னத்திரையில் தெய்வமகள் மற்றும் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் ஒர் இரவு என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தினார்.
அதனை தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவருக்கு ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கைவசம் வைத்திருக்கிறார்.
குறிப்பாக 2023 – ல் மட்டும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது. இப்படி ஓடும் வாணி போஜன் அவ்வபொழுது கிசுகிசுகளும் சிக்குவது வழக்கம்.
ஆனால் அதற்கு எல்லாம் எதுவும் பதில் கொடுக்காமல் மௌனமாக திரை உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் குறித்து பேசி இருக்கிறார் நடிகை வாணி போஜன்.
வாணி போஜனிடம் இயக்குனர் மகள் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது. அது யார் என்று உங்களுக்கு தெரியுமா என கேட்டதற்கு உடனே சிரித்துக் கொண்டே வாணி போஜன் நடிகர் அசோக் கூறினார்.
மேலும் பேசிய அவர் ஒரு நடிகையை கூட விட்டு வைக்க மாட்டான் பெண்களுடன் டேட் செய்கிறான். இப்போ நான் எந்த பொண்ண சொல்றது என நக்கல் அடித்தார்.
சாரி எனக்கு அந்த கிசுகிசு தெரியாது நடிகர் அசோக் ரொம்ப நல்லவன் மேலும் எல்லோரிடமும் நட்பாக பழகக் கூடியவர். அவரை நம்பி வரும் பெண் நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வார். என்று கூறினார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் கட்டி போல பரவி வருகிறது.