ஒரே ஒரு வைரல்புகைப்படத்தால் இணையத்தை அதிரவைத்த அனுஷ்கா செட்டி

4 years ago 418

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவின் சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் பருமனை அதிகப்படுத்திய அனுஷ்கா, இதனால் பல படவாய்ப்புகளை இழந்து ஆள் எங்கே சென்றார் என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தார். 

தற்போது தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தை இயக்கிய பி.மகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அனுஷ்கா.

இந்த படத்திற்காக தனது உடல்மொழியை மாற்றி நடிக்கிறாராம். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனுஷ்காவை பார்க்கலாம் என்று டைரக்டர் மகேஷ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தை யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.இந்நிலையில், முகம் முழுதும் கூந்தலை படற விட்டபடி க்ளோஸ்அப்பில் ஒரு செல்ஃபியை க்ளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிவிட்டனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...