ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?

3 years ago 211

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் ‘எனிமி’. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘எனிமி’ படம் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...