ஓடிடி தளத்தில் வெளியாகிறது ஜகமே தந்திரம்...

3 years ago 286

தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டது. 

ஆனால், இறுதி செய்யப்படாமல் இருந்தது. 'ஏலே' பட வெளியீடு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு 'ஏலே' படத்தைக் கொடுத்துவிட்டார். பின்பு, 'ஜகமே தந்திரம்' படத்தையும் ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்துவிட்டார்.

 ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் விலை கொடுத்து 'ஜகமே தந்திரம்' படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் 'ஜகமே தந்திரம்' வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மேலும், படத்தின் டீஸரும் வெளியாகியுள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதே வேளையில், ஓடிடி வெளியீட்டால் சோகமாகியுள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...