ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் திரிஷா படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 years ago 262

திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். 

நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 

சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...