ஓடிடியில் வெளியாகவுள்ள சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம்

3 years ago 390

'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. 

படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜெய் பீம் படத்தின் போஸ்டர்களில் சூர்யா வழக்கறிஞர் உடையில் காணப்படுகிறார். மேலும் பழங்குடியின மக்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. 

உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...