ஓடிடியில் வெளியாகிறது விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள படம்

3 years ago 294

கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் என பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக நடிக்கவும் விஜய் சேதுபதிக்கு அதிகமான வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாப்ஸியுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் சத்தமே இல்லாமல் எடுக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடித்துள்ளனர். 

நடிகை ராதிகா சரத்குமார்,தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்ற ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது. ஆனால் இதுவரை இந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் மாமனிதன் ஓடிடியில் வெளியாக இருக்க இப்பொழுது புதிதாக இந்தப் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...