ஓவியா அளித்த விளக்கம்... ரசிகர்கள் ஆச்சரியம்

3 years ago 327

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உருவானது. 

அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.

நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்'' என்று சாடினார். 

ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்'' என்று பதிவிட்டுள்ளார். 

கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...