கசிந்தது விஜய் 67 சீக்ரெட்.! சங்கத்தில் இணைந்த பிக்பாஸ் ஜனனி?

2 years ago 398

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தில் ‘’ பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

‘திருப்பாச்சி’, ‘கில்லி’, ‘ஆதி’, ‘குருவி’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. மேலும், இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிப்பதை அண்மையில் உறுதி செய்தார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...