கட்டழகி கோபிகா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

3 years ago 542

ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை கோபிகா. இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்தார்.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றவர். 

ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா. 


 இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் சில தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், குழந்தைளுடன் அதே அழகில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...