கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனா

3 years ago 323

நடிகை பாவனா தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகி சினிமா ரசிகர்கள் மனதில் வரவேற்பு பெற்றார்.

அதன் மூலம் இவர் தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாகி அன்றைய கால கட்டத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிறகு வெயில், கூடல் நகர், தீபாவளி போன்ற படங்களில் நடித்து உள்ளார்.நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித்துடன் இணைந்து நடித்து வெளியான அசல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதன்பின் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா இல்லை பட வாய்ப்புகள் வரவில்லையா என்பது தெரியவில்லை. 

தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் அவர் நடிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் சிக்கிய பாவனா பின் அதில் இருந்து மீண்டு தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

நேற்று அவருக்கு 3வது வருட திருமண நாள், எனவே கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...