கணவர் சஞ்சீவிற்கே தெரியாமல் முழுசா சந்தியாவாக மாறிய ஆல்யா!

3 years ago 818

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் நடிகை ஆல்யா மானசா. 1992-ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். 

அடிப்படையில் டான்சரான இவர், ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். கலைஞர் டிவியில் மானாட மயிலாட(சீசன் 10) நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின் 2017-ஆம் ஆண்டில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஜூலியம் 4 பேரும் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் முக்கிய கேரக்டராக நகைச்சுவை நடிகர் அமுதவனனுடன், மணீஷாஎன்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவி-யில் இதுவரை ஒளிபரப்பான ஹிட் சீரியல்களின் வரிசையில் ராஜா ராணி சீரியலும் ஒன்று. விமர்சனங்கள் பல கடந்து சின்னத்திரை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிகரமாக இருந்து வருபவர் ஆல்யா மானசா. 

இவரது இயற்பெயரான ஆல்யா மானசா என்பதை விட ராஜா ராணி சீரியலில் இவர் நடித்த கேரக்டர் பெயரான செம்பா என்பதையே ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார். அந்த அளவிற்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்களின் கவனம் பெற்றதை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்தும் புகழ் பெற்றார்.

இதனிடையே ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்த ஆல்யா மானசாவிற்கும், ஹீரோவாக கார்த்தி என்ற பாத்திரத்தில் நடித்த சஞ்சீவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. 

இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.

தற்போது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிரர் ஆல்யா மானசா. 

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங் ரிசார்ட் ஒன்றில் நடந்து வருகிறது.

ஆனால் இந்த எபிசோட்களில் நேரில் சென்று பங்கேற்காத ஆல்யா, போனில் பேசுவது போல சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதி SANJIEV&ALYA என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். 

இதில் குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் ஆல்யா, லாக்டவுனில் தாங்கள் செய்து வரும் விஷயங்களை வீடியோவாக தங்களது யூடியூப் சேனலில் அப்லோட் செய்து வருகின்றனர். 

இந்த சேனல் துவக்கி 3 மாதங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் சுமார் 3.58 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் சஞ்சீவிற்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக முழுசா சந்தியாவா மாறிய ஆல்யா (Mulusaa Sandhya vaa maariya Alya) என்ற பெயரில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...