கண்கலங்க கூடாது... நடிக்க வாங்க... வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்

3 years ago 341

நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். 

எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.


உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...