கண்டுகொள்ளாத விஜய் டிவி.! முக்கிய நடிகரை அள்ளிக்கொண்ட சன் டிவி.!

3 years ago 422

கோலிவுட்டில் இங்கிலீஷ் படம், குளிர் 100 டிகிரி போன்ற திரைப்படங்களில் சஞீவ் கதாநாயகனாக நடித்து இருப்பார். இவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்து மக்களிடம் பிரபலமடைந்தார். 

அதன் பிறகு, விஜய் டிவியின் காற்றின்மொழி சீரியலில் நடித்து இருந்தார். இருப்பினும், இந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் சன் டிவி பக்கம் அவர் தலைகாட்ட உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய சம்பளம் வாங்கிக் கொடுத்து சஞ்சீவினை ஒரு புதிய சீரியலில் சன் டிவி பிரபலம் ஒரிவர் கமிட் செய்து உள்ளார்.

இந்த சீரியல், தினமும் ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். சஞ்சீவ் விஜய் டிவியை விட்டு சென்றது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...