கண்ணம்மா புகழ் ரோஷ்னி குறித்து பரவும் தகவலுக்கு பதில் இதோ!

4 years ago 349

விஜய் டிவியில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் குறித்து சமீபத்தில் பரவி வரும் தகவல் அவரின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுக் குறித்து விவரமாக பார்க்கலாம் வாங்க.

இவரது பெயரை பலரும் மறந்து விட்டனர். கண்ணம்மா என்று சொல்லி அழைத்தால் தான் அனைவருக்கும் மனதில் டக்கென்று ஞாபகத்திற்கு வந்து விடுகின்றார். 

ஒரே ஒரு எபிசோடில் மண்ணிலிருந்து விண்ணுலகம் வரைக்கும் சுற்றித்திரிந்து பல ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்ட கண்ணம்மா தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது சுயமான சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ரோஷ்னி ஹரிப்ரியன்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி, கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே, என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவியது.

ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.அதாவது, சீரியலில் குழந்தை பெற்றெடுத்த தாய் ஆக கண்ணம்மா இருப்பார். 

அதேபோல், சீரியலில் குழந்தைகள் 8 வயது வளர்ந்துவிட்டதாக கதை நகரும். ஆனால், ரோஷிணி தனக்கு குழந்தை வேண்டும் எனக் கேட்பதாகவும் வீட்டுக்கு வந்தாலும் குழந்தை குறித்து கதாபாத்திரமாகவே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த அத்தனைத் தகவல்களையும் கண்ணம்மா ரோஷிணி மறுத்துள்ளார். தான் மன அளவிலும் உடல் அளவிலும் மிகவும் நலமுடன் இருப்பதாகவே தெரிவித்துள்ளார். 

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தான் எப்போதும் தொழில் பாரத்தை மனதுக்குள் ஏற்றுக்கொள்ளாதவள் என்றும் ரசிகர்களுக்காக விளக்கம் அளித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...