கதாநாயகியாக களமிறங்கும் இயக்குநர் சங்கரின் மகள்.... ஹீரோ யார் தெரியுமா?

3 years ago 611

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார். 

இப்படத்திற்கு ‘விருமன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...