கமலின் மகளுக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா ? இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

3 years ago 587

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடித்து வெளியான கிராக் எனும் திரைப்படம் சக்கப்போடு போட்டு வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 

தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் 60 ஆண்டுகாள சினிமா வாழ்க்கையில் பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். தன்னை தொடர்ந்து தன் மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்தநிலையில் தற்போது தன் அப்பா, அம்மா உதவி செய்யவில்லை என்றும், தன் செலவை கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் வேலைக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்றும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை தீரும் வரை காத்திருக்க முடியாது. இது போன்ற சூழலில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினம் தான். மாஸ்க் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது பயமாக இருக்கிறது. நான் பொய் சொல்லவில்லை.

ஆனால் மற்றவர்களை போன்று எனக்கும் நிதி சிக்கல் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. படப்பிடிப்பை துவங்க அவர்கள் தயாராகிவிட்டால் நான் கிளம்ப வேண்டியது தான்.

நாம் ஒவ்வொரும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும். என் பில்களை நான் தான் கட்டுகிறேன். எனக்கு அப்பாவோ, அம்மாவோ உதவி செய்வது இல்லை என்றார். 

தன் அப்பா, அம்மாவை சார்ந்திராது தனியாக வாழ்கிறார் ஸ்ருதி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கும் நிதி சிக்கல் என்பதை தான் நம்ப முடியவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

மேலும் கமல் தன் மகளுக்கு உதவி செய்வது இல்லையா என்று பலரும் வியந்து பேசுகிறார்கள். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...