கமலின் விக்ரம் படத்தில் இணையும் ஐந்தாவது தேசிய விருது பெற்ற நடிகர்

3 years ago 262

அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் ஹீரோக்களின் படங்கள், மல்டி ஸ்டார் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் படங்களில் ஒன்று கமல் நடித்து வரும் விக்ரம் படம். டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் மூலம் கிட்டதட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார் கமல்.

கமலின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தில் சமீபத்தில் தான் அவர் பிரேக் எடுத்துள்ளார். அரசியல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக கமல் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை. அவர் நடித்து வந்த இந்தியன் 2 படமும் பல பிரச்சனைகளால் பாதியில் நிற்கிறது.

தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஷ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

லேட்டஸ்ட் தகவலாக மலையாள சினிமாவின் பிரபல எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகரும், 2018 ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவருமான செம்பன் வினோத் ஜோஸ், விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம். விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடத்தப்பட்டது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக 5 பேர் நடிக்க உள்ளதாக ஆரம்பத்திலேயே கூறப்பட்டது. இவர்களில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் விக்ரம் படத்தில் ஏற்கனவே இணைந்துள்ளனர். இதனால் செம்பன் வினோத் ஜோஸ் மற்றொரு வில்லனாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்தடுத்த பட வேலைகள், பிக்பாஸ் உள்ளிட்டவைகள் இருப்பதால் விக்ரம் படத்தில் கமல் நடிக்கும் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ஜனவரியில் பிக்பாஸ் 5 இறுதிப் போட்டி ஜனவரி மாதம் நடைபெற உள்ளதால் அதற்கு முன் விக்ரம் படத்தின் வேலைகளை முடித்து விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...