கமல்ஹாசனின் படத்திலிருந்து துரத்தப்பட்ட ரஜினிபட நடிகை! இதுதான் காரணமா?

3 years ago 374

தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளாக உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடித்து பெரிய ஹிட் படமாக அமைந்தது தேவர் மகன். 

கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை ரேவதி, கெளதமி நடித்திருப்பார்கள். ஆனால் நடிகை ரேவதிக்கு முன்னதாக அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து படத்தில் நடித்த மீனா தான் நடிக்க வைத்திருந்தார்களாம்.

அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனி ஒரு கதாபாத்திரமாக அமைந்தது ரேவதியின் கதாபாத்திரம். குழந்தைத்தனமான அந்த கதாபாத்திரத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட ரேவதி கதாபாத்திரத்தில் முதன் முதலில் ஒப்பந்தமானவர் நடிகை மீனா. அதற்காக மூன்று நாட்கள் மீனாவை வைத்து படப்பிடிப்பை நடத்தியது படக்குழு.

இதையடுத்து, மீனாவுக்கும் இந்த கதாபாத்திரத்திற்கும் சம்பந்தமில்லை என கமலஹாசனிடம் தெரிவிக்க உடனடியாக ஆளை மாற்றி விட்டாராம் கமல். கமலஹாசன் மீனா முகத்தில் முதிர்ச்சி இல்லை என நிராகரித்துவிட்டாராம்.

பார்ப்பதற்கு பருவ மொட்டாக இருக்கும் மீனாவை எப்படி கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் காட்டுவது என படக்குழுவினர் தவித்த தவிப்பை பார்த்துவிட்டு கமல் மாற்றியதாக தகவல். அதன் பிறகு வந்த ரேவதியும் சும்மா சொல்லக்கூடாது. நடிப்பில் அசரடித்து விட்டார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...