கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்!

3 years ago 302

பிக்பாஸ் பிரபலமும் பாடகியுமான சிசித்ரா கமல் பற்றிய அவதூறாக பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான் ஆரம்பித்த கே எச் என்ற கதர் ஆடையை நிறுவனத்தை ஆரம்பித்து அதை அறிமுகப்படுத்தியுள்ளார். அதை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் வடிவமைத்து இறுதி நிகழ்ச்சியில் போடவும் வைத்தார்.

இந்நிலையில், தனக்கு ’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் எனக் காண்பிக்க சொன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ரா இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார். 

ஆனால் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கி விட்டார். ஆனால் அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “கைப்பாவை மாஸ்டர் என்றால் அது கமல் தான். அவரின் முட்டாள் தனமான பிராண்ட் கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை. அதை என்னை அணிய வைத்து, அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள்.

மேலும், என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல். மோசமான குணம் கொண்டவர். ஒரு ரூபா செலவு பண்ணல. தீந்து போச்சு கணக்கு. அவர் எதுக்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...