கருடா ராமை மரியாதையுடன் வழியனுப்பிய படக்குழு.. நெகிழந்துபோன வில்லன் நடிகர்

3 years ago 381

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் வில்லனாக கே.ஜி.எப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடித்துள்ளார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி பழநி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. 

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் கருடா ராமின் காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது. 


அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

கே.ஜி.எப். படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. 

இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குனர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கருடா ராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...