‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் – சந்தோஷ் நாராயணன்

3 years ago 285

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் 41-வது படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். 

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 

“கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப் போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, தனுஷ் மற்றும் படக்குழுவினரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...