கலாய்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. வனிதா கொடுத்த பதிலடி

3 years ago 395

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதற்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ள காமெடி படமான பிக்கப் டிராப் படத்திற்காக அவருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். மேலும் அவரோடு கன்னத்தோடு கன்னம் ஒட்டியபடி ஒரு புகைப்படம் வெளியானது.

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்து பதிவிட லட்சுமி ராமகிருஷ்ணன் செம காமெடியா இருக்கு தயவு செய்து இனி எனக்கு டேக் செய்யாதீர்கள் என கூறியிருந்தார்.

 லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிலுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விஷத்தன்மை வாய்ந்த இந்த லேடியை நான் நேசிக்கிறேன். ‌‌ அவர் எதுக்கு ரகசிய ரசிகையாகி விட்டார். நல்ல ஒரு காமெடியான ஸ்க்ரிப்ட் உடனான திரைப்படம் உங்களுக்காக உருவாகிறது என தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...