கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா.?

2 years ago 292

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் முதலில் புஷ்பா திரைப்படத்தின் இடம் பெற்றிருந்த ஊ சொல்றியா பாடல் மூலம் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். 

அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் செய்து விளம்பரப்படுத்தினார். அதன் பிறகு இவர் நடித்திருந்த பேமிலி மென் வெப் சீரிஸிலும் நெருக்கமான கவர்ச்சி நிறைந்த காட்சியில் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து கவர்ச்சியில் மூழ்கி இருந்த சமந்தா திடீரென்று கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது அவர் இனிமேல் நடிக்க இருக்கும் புதிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கேற்றார் போல் நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேடி வருவதாகவும் மற்ற படங்களில் கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகள் இருக்க கூடாது, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிப்பதாகவும், அதற்கு சம்மதிப்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்க சமந்தா கால்ஷீட் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி சமந்தாவின் இந்த அதிரடியான முடிவால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...