கவின் தொடர்பில் லாஸ்லியா என்ன சொன்னார் தெரியுமா?

3 years ago 360

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட கவினும், லாஸ்லியாவும், ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றதற்கு கவின் - லாஸ்லியாவின் காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாஸ்லியா பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் லாஸ்லியா. அவர் கூறியதாவது:

 


எனக்கும் கவினுக்கும் இருப்பது பெர்சனல் விஷயம். அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட்டுவிட்டு என் படத்தை பற்றி கேளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, தர்ஷனை அண்ணன் என்று சொல்லிவிட்டு, தற்போது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து பேசியுள்ள லாஸ்லியா, அது பெர்சனல் லைப், இது சினிமா. 

படத்தில் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டு அதன் பின்னர் அதிலிருந்து வெளியில் வரப்போகிறோம் அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...