கவுதம் மேனனுக்கு ஜோடியான அமலா பால்

3 years ago 285

இயக்குனர் கவுதம் மேனன் தற்போது ஆந்தாலஜி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான புத்தம் புது காலை மற்றும் பாவக் கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.  தற்போது நவரசா மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய ஆந்தாலஜி படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்தவகையில், இவர் இயக்கும் குட்டி ஸ்டோரி என்கிற ஆந்தாலஜி படம் வருகிற பிப்.12ஆம் திகதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. 

இந்த ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை கவுதம் மேனன், இயக்கியதோடு மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாகவும் அவரே நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...