காசு கொடுத்தாலும் அதை செய்யமாட்டேன்! தயாரிப்பாளரிடம் கூறிய சமந்தா

3 years ago 273

நடிகைகள் ஆரம்பகாலத்தில் ஒரு குறிக்கோளோடு சினிமாவில் இறங்குகிறார்கள். தனக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம்பர் ஒன் நடிகையாக வலம் வரவேண்டும் என்று நினைப்பதுண்டு.

வயது ஏறிக்கொண்டு போனாலும் நாளுக்கு நாள் தன்னுடைய மவுசு அதிகரித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இதுவரை ஹிந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதே கிடையாது.

அதற்கு காரணம் ஹிந்திக்கு சென்றால் பத்தோடு பதினொன்று நாயகியாக மாறி விடுவோம் என்ற அச்சம்தான். 

அதனால் இருக்கும் இடத்திலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவது பெருமையை தான் என நயன்தாரா தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே போல் தான் சமந்தாவும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற புகழே போதும் எனவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக சொல்லி தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...