காதலனை கரம் பிடித்த செம்பருத்தி ஷபானா! குவியும் வாழ்த்துகள்!

3 years ago 300

சின்னதிரையில் பலரது காதல், திருமணத்தில் முடிந்துள்ளன. இதனிடையே பிரபல முன்னணி சேனலான ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். 

இல்லத்தரசிகளின் நிஜ அனுபவங்களை கண்முன்னே காட்டி வரும் இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அவரது மூத்த மகனாக செழியன் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன். அதே போல மற்றொரு பிரபல சேனலான ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா ராமன், ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் செம்பருத்தி புகழ் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி புகழ் ஆர்யன் என்கிற வேலு லட்சுமணன் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இன்ஸ்டாகிராமில் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையே இன்று தனக்கு திருமணம் நடப்பதாக நடிகை ஷபானா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காதலித்து திருமணம் செய்து, சென்னையிலேயே செட்டில் ஆவோம் என தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...